February 9, 2018
தண்டோரா குழு
கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்கும் மனு மீதான விசாரணையை வரும் 12ம் தேதிக்கு தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் உத்திரவிட்டார்.
கோவையில் லஞ்ச வழக்கில் கைதான துணைவேந்தர் கணபதியை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை ஊழல் வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான விசாரணை இன்று
(பிப் 9)நடைபெற்றது
ஊழல் தடுப்பு சட்ட வழக்குகள் நீதிமன்ற நீதிபதி ஜான் மினோ விடுமுறை என்பதால், வழக்கினை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.வழக்கு விசாரணைக்காக துணைவேந்தர் கணபதி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்றத்தில் ஊடகங்களை பார்த்த துணைவேந்தர் கணபதி ஆவேசமாக பேசினார்.அப்போது எழுதும் போது மனசாட்சியுடன் எழுதுங்கள்,எதைவேண்டுமானலும் எழுத வேண்டும் என எழுதாதீர்கள்,மனித தன்மையுடன் எழுதுங்கள் என ஊடகங்களை பார்த்து துணைவேந்தர் கணபதி தெரிவித்தார்.
இதனையடுத்து காவலில் எடுக்க அனுமதி கோரும் மனுவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி மதுரசேகர் விசாரித்தார்.இதனை தொடர்ந்து துணைவேந்தர் கணபதியை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவை 12 ம் தேதிக்கு நீதிபதி ஓத்திவைத்தார்.இதே போல துணைவேந்தர் கணபதி
முதல் வகுப்பு கேட்டு தாக்கல் செய்து இருந்த மனுவும் 12ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.