March 9, 2021
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை, துடியலூர், கணபதி பகுதி வி.ஜி.ராவ் நகர் மற்றும் வரதராஜலூ நகர் ஆகிய பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
கோவை மாநகராட்சி சார்பாக சிறுவாணி, பில்லூர், பவானி, ஆழியாறு திட்டத்தின் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. துடியலூர், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் விநியோகிக்கப்படுவதில் சிக்கல் ஏற்படுகின்றது. பொதுமான குடிநீர் இல்லாத காரணத்தினால் வாரம் ஒரு முறை இப்பகுதிகளில் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இப்பகுதிகளில் குடிநீர் அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டு கூடுதல் குடிநீர் கிடைக்க மாநகராட்சி சார்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநகராட்சி கமிஷனர் இன்று நேரில் பார்வையிட்டு இதற்கான கள ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின்போது மாநகராட்சி துணை கமிஷனர் மதுராந்தகி, மாநகரப்பொறியாளர் லட்சுமணன், செயற்பொறியாளர் (24*7 குடிநீர் திட்டம்) பார்வதி மற்றும் பலர் உடன் இருந்தனர்.