கோவை துடியலூர் அருகே டீதூள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்தில் லாரியின் அடியில் சிக்கிய உதவியாளரை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை துடியலூர் அருகே உள்ள தனியார் டீதூள் குடோனில் இருந்து டீ தூள் மூடைகளை ஏற்றிக் கொண்டு கிணத்துக்கடவுக்கு லாரி சென்றுள்ளது. லாரியை ஹனிபா என்பவர் ஓட்டியுள்ளார்.
லாரி கோவை மேட்டுப்பாளையம் சாலைக்கு வரும்போது அங்கு கேபிள் பதிக்க தோண்டப்பட்ட குழியில் லாரியின் பின் பக்க சக்கரம் சிக்கியது. லாரியின் பாரம் தாங்காமல் லாரி இடதுபுறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் லாரியில் இருந்த உதவியாளார் ராஜா என்பவர் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டார். இதைப் பார்த்த பொதுமக்கள் லாரியின் அடியில் சிக்கிய ராஜாவை மீட்க ஜாக்கிகளை பயன்படுத்தி முயற்சி செய்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் பொதுமக்கள் உதவியுடன் ராஜாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்