• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

துக்க வீட்டில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் – ஒருவர் பலி 3 பேர் படுகாயம் – கோவையில் நேர்ந்த பெரும் சோகம்

November 15, 2024 தண்டோரா குழு

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ராமலட்சுமி (85) இவர் கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த ராமலட்சுமி உயிரிழந்தார்.

இன்று அவரது உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று இரவு இறந்த ராமலட்சுமி உடலை ஃப்ரீசர் பாக்ஸ் மூலம் வீட்டில் வைத்திருந்தனர்.இன்று காலை துக்க நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு ஏராளமான பேர் வந்திருந்து ராமலட்சுமி குடும்பத்திற்கு ஆறுதல் கூறி கொண்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் காலை 10:30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரீசர் பாக்ஸ் ஏசி கிடைக்காது என்பதால் உடனே ஜெனரேட்டர் மூலம் பிரேசர் பாக்ஸ் க்கு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது ஓடிக்கொண்டிருந்த ஜெனரேட்டரில் பெட்ரோல் ஊத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது.இதனால் அங்கு புகைமண்டலம் ஏற்பட்டது.ராமலட்சுமி உடல் இருந்த அறையில் இருந்த உறவினர்கள் வெளியே ஓடினர்.சிலர் ஒரு அறையில் சிக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பத்மாவதி,பானுமதி,ஶ்ரீராம்,ராஜேஸ்வரன் ஆகிய 4 பேர் ஒரு அறையில் மாட்டிக் கொண்டனர்.அவர்களை உறவினர்கள் மீட்டனர்.

உள்ளே தீக்காயம் அடைந்து போராடிக் கொண்டிருந்த 4 பேரையும் உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கே சிகிச்சை பலனளிக்காமல் பத்மாவதி (55) என்பவர் இறந்தார். மீதி மூன்று பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.துக்க நிகழ்ச்சிக்காக சென்ற உறவினர்கள் தீப்பிடித்து எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க