February 14, 2018
தண்டோரா குழு
தீவிர அரசியலில் ஈடுபட்ட பின் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் ஆங்கில தொலைக்காட்சி பேட்டியில் நடிகர் கமல் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தான் அரசியலில் ஈடுபடுவது அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். இதையடுத்து, கட்சி பெயர் அறிவிப்பு, பொதுக்கூட்டம் நடத்துவது என அதற்கான வேளையில் ஆயுத்தமாகியுள்ளார். இதற்காக இன்று சென்னையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்தஅவர், வெளிவர இருக்கும் இரு படங்கங்களான’விஸ்வரூபம்-2′, மற்றும்’இந்தியன்-2′ படத்தினை தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்றும் தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.இது அவரது ரசிகர்களை வருத்தம் அடைய செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.