• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீவிரவாதம் எப்போதும் தீர்வாகாது. மெகபூபா முஃதி.

April 30, 2016 தண்டோரா குழு

தீவிரவாதத்தின் பிடியில் முஸ்லீம் நாடுகளே மிகவும் சிக்கியுள்ளன என காஷ்மீர் மாநிலத்தின் முதல் மந்திரி மெகபூபா முஃதி கூறியுள்ளார்.

சூசெட் கிராமத்திற்குச் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களைக் கண்காணிக்கச் சென்றிருந்த போது, இந்தியா, பாகிஸ்தானிடையே இணக்கத்தை ஏற்படுத்த எல்லையில் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்துவது அவசியம் என்று கூறினார்.

இந்தக் குறுகிய காலத்தில் ஐ.எஸ்.ஐ எஸ்.எனப்படும் தீவிரவாத அமைப்பு எல்லா நாடுகள் மீதும் தங்கள் தாக்குதலை நடத்தியுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், ஈராக், சூடான், லிபியா, ஏமன், பாலஸ்தீனம், இந்தியா, பாகிஸ்தான் போன்ற அனைத்து நாடுகள் மீதும் தீவிரவாதத்தை திணித்துள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, யூரோப்யூனியன், அனைவரும் ஒன்று சேர்ந்து இத்தீவிரவாதத்தை ஒழிப்பதற்குச் சபதம் மேற்கொண்டுள்ளனர்.

இத்தீவிரவாதிகளின் தாக்குதலால் சிரியாவிலிருந்து, நாடு நகரத்தை இழந்து, சொத்து சுகங்களை இழந்து, சொந்த பந்தங்களை இழந்து, அனாதையாய், இடம் பெயர்ந்த அகதிகள் பல லட்சம் பேர். பொருட்களைப் பங்கிடுவது போல் மக்களை, பல நாடுகளும் பங்கிட்டுக் கொண்டது கொடுமையின் உச்சம்.

நமது பிரதம மந்திரி நரேந்திர மோடி அவர்கள் பதவி ஏற்றவுடன், பல நாடுகளுக்கும் சென்று நல்லிணக்கத்தையும், வியாபாரத்தையும், அபிவிருத்தி செய்ய முயற்சி மேற்கொண்டார்.

அதன்படி அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் சென்று, தீவிரவாதத்தை அடக்கும் முறைகளைப் பற்றியும், இரு நாடுகளுக்குமிடையில் சுமுகமான உறவை ஏற்படுத்தும் வழி முறைகளைப் பற்றியும், விவாதித்துள்ளார்.

ஆனால் இவ்வாறு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே, பதன்கோட் என்னும் இடத்தில் உள்ள விமானப் படைத் தளத்தை தீவிரவாதிகள் தாக்கியுள்ளனர். இதில் பாகிஸ்தானுக்குப் பெரும் பங்கு உள்ளது என்பதைப் பலவழிகளில் இந்தியா நிரூபித்துள்ளது. ஆயினும் நமது அண்டை நாடான பாகிஸ்தான் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

இந்தச் சூழ்நிலையிலும், போரை எந்த விதத்திலும் ஊக்குவிக்கக் கூடாது என்றும், சமாதான முறையே சிறந்தது என்ற கோட்பாட்டுடன் இந்தியா மறுபடியும் பேச்சு வார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்துள்ளது.
இதைக் குறிப்பிட்ட காஷ்மீர் முதல்வர், இந்தியாவின் முயற்சியைப் பாராட்டியதோடு மட்டுமின்றி, முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவும், ஈரானும் கைகோர்த்துக் கொள்ளும்போது ஏன் இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் அபிப்பிராய பேதங்களை துறந்து ஒன்று சேரக்கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து ஒடுக்கப்பட்ட இளைஞர்களை முன்னேற்றவும், தீவிர வாதத்தை அறவே ஒழிக்கவும் முயல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எல்லா நாடுகளும் இந்த முயற்சிக்காக ஒன்று பட்டுள்ளன. ஏனெனில் இது நமது வாழ்க்கை பிரச்சினை என்றார்.

தேவையற்ற பகைமையின் காரணமாக நாம் செலவிடும் தொகையை ஏன் பலனுள்ள நல்லிணக்கத்திற்காகச் செலவிடக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு முதல் படியாக ஜம்மு காஷ்மீர் எல்லையில் சுற்றுலாத் திட்டங்களை வகுக்கலாம் என்று யோசனை கூறினார்.

எல்லையில் நடக்கும் எந்த வன்முறைச் சம்பவங்களும் உடனே தீப்பொறி போல் மக்களை அடைந்து விடுகிறது. ஆனால் அங்கே நடக்கும் நிலம் பங்கிடுதல், தண்ணீர் பங்கிடுதல் போன்ற சுமுகமான செயல்கள் வெளிவருவதில்லை என்றும் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க