• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளி பண்டிகைக்காக கோவையில் இருந்து தூத்துக்குடி, நாகர்கோயிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க வலியுறுத்தல்

October 11, 2022 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் இருந்து தென்மாவட்டங்களான தூத்துக்குடி, மதுரை, நாகர்கோயிலுக்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவையில் இருந்து சென்னை, மயிலாடுதுறை மற்றும் கேரள மாநிலம் எர்ணாக்குளம், திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழித்தடத்தில் பண்டிகைக் காலச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் கோவையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, நாகர்கோயில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு சிறப்பு விரைவு ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட ரயில் பயணிகள் கூறுகையில்,

‘‘கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கி வேலை பார்க்கும் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி, நாகர்கோயில் உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் அதிகமானோர், தீபாவளியை தங்களின் சொந்த ஊர்களில் கொண்டாடச் செல்வார்கள். இந்தாண்டு தீபாவளிக்கு கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, நாகர்கோயில் வழித்தடம் மற்றும் கோவை, போத்தனூர், கிணத்துக்கடவு, மடத்துக்குளம், உடுமலை, பழனி, மதுரை வழித்தடத்தில் முன்பதிவில்லாத, சிறப்பு விரைவு ரயில் இயக்க வேண்டும்.

தீபாவளிக்கு 10 நாள்கள் முன்பே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால், வெளியூர் செல்வோர்களுக்கு வசதியாக இருக்கும். அதேபோல், பண்டிகை முடிந்து 15 நாள்கள் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால், தொழிலாளர்கள் மீண்டும் கோவைக்கு திரும்பி வந்து பணிகளைத் தொடரவும் எளிதாக இருக்கும்’’ என்றனர்

மேலும் படிக்க