• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீபாவளியையொட்டி வருகிற நவம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படும் – தமிழக அரசு

October 31, 2018 தண்டோரா குழு

தீபாவளியையொட்டி வருகிற நவம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நவம்பர் 6ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகை செவ்வாய்கிழமை வருவதால் சொந்த ஊர் செல்லும் மக்கள் வசதிக்காக 5-ம் தேதி அரசு விடுமுறையாக அறிவித்திருந்தது. அதற்கு பதிலாக நவ.10ம் தேதி பணி நாளாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தீபாவளியையொட்டி வருகிற நவம்பர் 2 முதல் 5 ஆம் தேதி வரை ரேஷன் கடைகள் தொடர்ந்து செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசின் உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தீபாவளியை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசியப் பொருட்களை சிரமமின்றி பெற்றுக் கொள்ளும் வகையில் வருகிற 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை, 4 நாட்கள் தொடர்ந்து அனைத்து நியாயவிலை கடைகளும் வழக்கம் போல் செயல்பட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளுக்கு, வழக்கமாக, விடுமுறை நாளான முதல் வெள்ளிக்கிழமை, அதாவது வருகிற 2ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால், மூன்றாவது வெள்ளிக் கிழமையான 16ஆம் தேதி நியாயவிலை கடைகளுக்கும் விடுமுறை நாளாகும் எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க