• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தீபாவளிக்கு வாங்கும் ஸ்வீட்ஸ் தரமானதா? – ஆய்வு பணியில் கோவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்

October 29, 2018 தண்டோரா குழு

தீபாவளி பண்டிகை என்றாலே இனிப்பு தான் என்று சொல்லும் அளவிற்கு இனிப்பு பலகாரங்கள் அனைவரது வீடுகளிலும் இருக்கும். சிலர் தங்களது வீடுகளிலேயே பலகாரங்கள் செய்து விடுவார்கள். ஆனால், பெரும்பாலானோர் கடைகளுக்கு சென்று ஸ்வீட் வாங்கி தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லி இனிப்பு வழங்குவார்கள். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் ஸ்வீட்ஸ் கடைகளில் ஸ்வீட்ஸ், காரம் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

எனினும், இந்த ஸ்வீட்ஸ், காரம் உள்ளிட்டவை தரமாக உள்ளதா? கூடுதல் நிறமிகள் சேர்க்கப்படுகிறதா? பயன்படுத்திய ஆயில் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்து நமக்கு ஏதும் தெரியாது. இதனால் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் இது குறித்து ஆய்வுகள் நடத்த உணவு பாதுகாப்புத்துறையின் 5 சிறப்பு குழுக்களை அமைத்துள்ளார். இக்குழுகள் தீபாவளி பண்டிகையையொட்டி தயார் செய்யப்படும் ஸ்வீட்ஸ் மற்றும் காரம் போன்றவற்றின் தரம் குறித்து கோவையில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில்,

தீபாவளிக்குள் அனைத்து கடைகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என்பதால் எங்களது குழுக்கள் நாள் தோறும் பல கடைகளுக்கு சென்று ஆய்வு செய்து வருகிறோம். இதுவரை அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை. எனினும் ஒருசிறு குறைகள் இருக்கும் கடைகளுக்கு அடுத்த முறை இதுபோன்று நடக்காத வகையில் நாங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.இனிப்பு, கார வகைகள் தரமானதாக செய்ய வேண்டும் என வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

மேலும்,பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. சமையல் செய்யும் இடத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தூய்மையான தண்ணீரை பயன்படுத்த வேண்டும். உணவுப் பொருட்களை திறந்த நிலையில் வைக்கக் கூடாது. இனிப்பு, காரம் தயாரித்த பாத்திரங்களை சுத்தமாக கழுவ வேண்டும். தயாரிப்பவர்கள், பேக்கிங் செய்யும் பணியில் ஈடுபடும் நபர்கள் கைகள், தலையில் உறைகளை அணிய வேண்டும். பேக்கிங்கில், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தயாரிப்பாளர் முகவரி, உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு எண் உள்ளிட்டவை இருக்க வேண்டும். கடைகளுக்கு உரிமம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஸ்வீட்ஸ், காரம் போன்றவற்றை வாங்கும் போது பொதுமக்களுக்கு கவனம் தேவை. ஏதேனும் புகார்கள் இருந்தால் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரியிடம் தெரிவிக்கலாம். உணவுப் பொருட்கள் தரம் குறித்து புகார் அளிக்க விரும்பும் பொதுமக்கள் 9444042322 என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம். அந்த புகார் மீது 24 மணிநேரத்தில் நடவடிக்கை எடுக்கபடும் இவ்வாறு அவர் கூறினார்.

இனிப்பு மற்றும் கார வகைகளை வாங்கும் போது பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முறைகள்,

1.அதிகப்படியான வண்ண நிறமிகள் கொண்டு இனிப்பு பொருட்கள் வாங்குவதை தவர்க்க வேண்டும்.

2.இனிப்பு வகைகளை பரிசு பொருட்களாக பேக்கிங் செய்து விற்பனை செய்யும்பொழுது அதில் பால் வகையான இனிப்புகளை மற்ற இனிப்புகளோடு கலந்திருந்தால் வாங்குவதை தவிர்க்க வேண்டும். பாலால் செய்யப்பட்ட இனிப்புகளின் சேமிக்கும் நிலை மற்றும் காலவதியாகும் தேதி குறிப்பிடப்பட்டுள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.

3.ஈக்கள் மொய்க்கும் வண்ணம் இனிப்பு மற்றும் கார வகைகள் இருந்தால் வாங்குவதை தவிர்க்க வேண்டும். துர்நாற்றம் வீசும் இனிப்பு கார வகைகளை தவிர்த்தல் வேண்டும்.

4.உணவு அங்காடிகளில் வாங்கும் இனிப்பு மற்றும் கார வகைகளுக்கு முறையான ரசீது பெற்றிருத்தல் வேண்டும்.

5.உணவு கையாளும் பணியாளர்கள் தூய்மையான ஆடைகள் அணிந்தும் நகங்களை சீர் செய்தும் தலைகவசம் கை யுறையுடன் இனிப்பு கார வகைகளை கையாளுகின்றனரா என்பதை உறுதி செய்தல் வேண்டும்.

6.இனிப்பு கார வகைககளை தயாரிக்க பயன்படுத்தப்படும் சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விவரங்களை தகவல் பலகையாக உணவு விற்பனை கூடத்தில் வைத்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும் படிக்க