• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தீண்டாமை சுவர் கட்டும் பணிகளை தடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சித்தலைவரிடம் மனு

July 1, 2019 தண்டோரா குழு

தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புக்கும், பொதுவழிக்கும் இடையே கட்டப்படும் தீண்டாமை சுவர் கட்டும் பணிகளை தடுக்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தனர்.

குருடம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கே வடமதுரையில் 50 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையான விருத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலைச்சுற்றி நான்கு திசைகளிலும், மதில் சுவர் உள்ளது. இந்நிலையில் இக்கோவிலில் வருகின்ற 11 ஆம் தேதி கும்பாபிசேகம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்புக்கு அருகேயும்,பொதுவழியை ஒட்டியும் 7 அடி உயரத்தில் 300 அடிக்கு இந்த சுவர் கோவில் நிர்வாகத்தால் கட்டப்படுகிறது. இது தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் , இந்து கோவிலுக்கும் இடையில் எழுப்பப்படும் தீண்டாமை சுவர் கட்டும் பணியை தடுத்து நிறுத்தக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் மனு அளித்தனர்.

மேலும் படிக்க