• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

March 25, 2023 தண்டோரா குழு

கோயமுத்தூர் தி சம்ஹிதா அகாடமி பள்ளியின் சார்பாக போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி இன்று காலை 9 மணிக்கு SPT மைதானத்தில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி பஞ்சாயத்து துணைத்தலைவர் சதிஷ் மற்றும் பள்ளியின் முதல்வர் புஷ்பஜா ஆகியோரால் கொடியசைத்து பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

இப்பேரணியில்மாணவர்கள்,ஆசிரியர்கள்,அலுவலர்கள்,பள்ளிஉதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டு விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

பேரணியின் முடிவில் மலுமிச்சம்பட்டி ஊராட்சி பஞ்சாயத்து துணைத்தலைவர் சதிஷ் மலுமிச்சம்பட்டி பகுதியில் போதைப் பொருள் துஷ்பிரயோகத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியைப் பாராட்டிப் பேசினார். தி சம்ஹிதா அகாடமி பள்ளி மாணவர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்துப் பேசினர்.

நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தின் சார்பாக நிலைய ஆய்வாளர் செய்துக்கொடுத்தார்கள்.

மேலும் படிக்க