• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தி ஐ பவுண்டேசனில் உலக குளுக்கோமா வாரம் – மார்ச் 10 முதல் 16 வரை இலவச கண் பரிசோதனை

March 8, 2024 தண்டோரா குழு

கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் டி ஐ பவுண்டேஷன் மருத்துவமனை இயங்கி வருகிறது இங்கு மார்ச் 11 முதல் 16 வரை உலக குளுக்கோமா வாரத்தை ஒட்டி , மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டும்மின்றி,முழுமையான கண்பரிசோதனை செய்து,குளுக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கண்பார்வை இழப்பை தடுக்க இலவச கண் அழுத்த நோய் பரிசோதனையை முன்னெடுத்துள்ளது தி ஐ பவுண்டேசன்.

நாட்டில் குளுக்கோமா கண் அழுத்தம் நோயை கண்டறிய நடத்திய சோதனையில் 3 முதல் 5 சதவீதம் இந்தியர்கள் இந்த நோயினால் தாக்கப்படும் அபாயத்தில் உள்ளார்கள் மேலும் இந்த ஆபத்தான எண்ணிக்கையில் 90சதவீதம் பேர் குளுக்கோமோ நோயின் பாதிப்பை கண்டறிய முடியாமல் உள்ளனர். குளுக்கோமா எந்த வித முன் அறிவிப்பும் இன்றி கண்பார்வையை இழக்க செய்யும் அதனால் குறிப்பாக 40 வயதிற்கு மேலானவர்கள் வழக்கமான கண் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டியது அவசியமாகும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் 40 வயதுக்கு மேல் சர்க்கரை நோய், உயர்கிட்ட பார்வை, காயம் ,வீக்கம், ஸ்டெராய்டு உபயோகித்தல், மற்றும் பிறவிக்கண் கோளாறுகள் உள்ளவர்களுக்கு குளோகோமோ வர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.உலக அளவில் 64.3 மில்லியன் மக்களுக்கு குளுக்கோமா பாதிப்பு உள்ளது இதில் 2.1மில்லியன் மக்கள் குளுக்கோமாவால் கண் பார்வையை இழந்துள்ளார்கள் குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் 11.9 மில்லியன் இந்தியர்களுக்கு எந்த நோய் பாதிப்பு ஏற்பட்டு 12.8% பேர் கண்பார்வையை இழக்க வாய்ப்புள்ளது.

இந்த நோயின் பாதிப்பு பற்றி பல்வேறு மக்களிடம் நடத்திய ஆய்வுகளின் படி இரண்டு முதல் 13 சதவீதம் வரை பாதிப்பு ஏற்படும் என்பதை வேலூர் கண் ஆய்வு, சென்னை குளுகோமா ஆய்வு ,அரவிந்த் கண் ஆய்வு ஆந்திர மாநிலக் கண் நோய் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குளுக்கோமாபாதிப்பு ஏற்பட்டால் முதல் நிலையாக பார்வையானது சைடு விஷசன் ( side vision) தான் குறையும் என்றும் தற்போது உள்ள காலகட்டத்தில் அனைத்து வயதினருக்கும் வருவதாகவும் குழந்தைகளுக்கு கூட தற்பொழுது அதிகம் இந்த நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் சைடு விசஷன் குறைவதால் பெரும்பாலான மக்களுக்கு இந்த பாதிப்பு பற்றி அதிகம் தெரிவதில்லை என்றும் கண்களில் வலி போன்றவை ஏற்படுவதில்லை என்றும் கூறுகின்றனர் மேலும் இந்த நோய் பாதிப்பை சரி செய்ய ஐ டிராப்ஸ் ,டேப்லெட் ,அல்லது லேசர் ஆப்ரேஷன், போன்றவை செய்து சரி செய்து கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தி ஐ ஃபவுண்டேஷன் சேர்மன் டி ராமமூர்த்தி, மருத்துவர்கள ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க