• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திவிக பாரூக் கொலை வழக்கில் மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரண்

March 20, 2017 தண்டோரா குழு

கோவையில் திராவிடர் விடுதலை கழக பொறுப்பாளர் கொலை வழக்கு தொடர்பாக இரண்டு இளைஞர்கள் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கோவையில் திராவிட விடுதலை கழகத்தைசேர்ந்த பாரூக் என்பவர் கடந்த 16 ம் தேதிகொலை செய்யப்பட்டார். மத நம்பிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதால் மத அடிப்படைவாதிகளால் இந்த கொலை நடத்தப்பட்டதாக காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தகொலை சம்பவத்தில் 6 பேர் கொண்டகுழுவினர் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. இந்த வழக்கு தொடர்பாக அன்ஷர்த் என்பவர்கடந்த வெள்ளிக்கிழமை கோவை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இந்நிலையில், சதாம் உசேன் மற்றும்சம்சுதீன் ஆகிய இருவரை காவல் துறையினர் தேடி வந்தனர். மேலும், பாரூக்கொலையில் சந்தேகதிற்கிடமானவகையில்இருந்த அவரது இரு நண்பர்களான அப்துல்முனாப் மற்றும் அகரம் ஜிந்தா ஆகியஇருவரை காவல் துறையினர் தனதுகட்டுப்பாட்டில் கொண்டுவந்து விசாரணைமேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்காவல்துறையினர் தேடிவந்த சதாம் உசேன்என்பவர் இன்று காலை கோவை 5 வதுகுற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண்அடைந்தார். பின்னர்,பிற்பகல் 3 மணிஅளவில் சம்சூதீன் என்பவரும் அதேநீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

இதனையடுத்து நீதிமன்றத்தில் சரண்அடைந்த இருவரையும் வரும் ஏப்ரல் 3 ம் தேதிவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதிசெல்வக்குமார் உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் சரணடைந்த இரண்டு பேருக்கும் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை எனவும், காவல் துறையினரின் அச்சுறுத்தலுக்கு பயந்து நீதிமன்றத்தில் சரணடைந்து இருப்பதாகவும் சரணடைந்தவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சரணடைந்த இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்க