• Download mobile app
11 May 2025, SundayEdition - 3378
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி ஏர்செல் நிறுவனம் மனு

February 28, 2018 தண்டோரா குழு

எங்கள் நிறுவனம் திவால் ஆனதாக அறிவிக்கக் கோரி தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில்(என்சிஎல்டி) எர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் மனுத்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சிவசங்கரன் என்பவரால் கடந்த 1999 -ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டது. சந்தையில் செல்போன் அறிமுகமாகும் போதே ஏர்செல் நிறுவனம் தொடங்கப்பட்டதால், மக்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு அதிக வரவேற்பு இருந்தது. அந்நிறுவனமும் பல்வேறு சலுகைகளை வழங்கியது.

இதனால், கடந்த டிசம்பர் மாதம்வரை ஏர்செல் நிறுவனத்துக்கு 8.5 கோடி வாடிக்கையாளர்களுடன் 6-வது இடத்தில் இருந்தது. ஆனால், மத்திய அரசு ஸ்பெக்ட்ராம் விலையைக் குறைத்ததும், அதிகமான நிறுவனங்கள் தொலைத்தொடர்பு துறைகளில் வந்ததும் போட்டியை அதிகரித்தன. இதனால், சந்தையில் போட்டியைச் சமாளிக்க முடியாமல் ஏர்செல் நிறுவனம் திணறியது.

இதுமட்டுமின்றி சலுகை விலையில் டேட்டாக்கள் கொடுத்தது, இலவச டாக்டைம், அதன்பின் நாள் ஒன்றுக்கு ஒரு ஜிபி வரை டேட்டாக்கள் போன்ற சலுகைகளால் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனத்திடம் இருந்து படிப்படியாக விலகி வேறு நிறுவனங்களை நாடினர்.

இதற்கிடையில், கடந்த வாரம் இந்தியா முழுக்க ஏர்செல் சிக்னல் வழங்கிய 8 ஆயிரம் டவர்கள் வரை தற்போது செயல் இழந்து இருந்தது. முக்கியமாக தென்னிந்தியாவில் அனைத்து டவர்களும் செயல் இழந்து உள்ளது. அவர்களின் இணையதளமும் செயலிழந்துள்ளது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் டவர் மீண்டும் செயல்பட தொடங்கியது. மேலும் இன்னும் 15 வருடங்களுக்கு கண்டிப்பாக செயல்படும் என்றும் அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில், ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவையில் நாளை மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் எர்செல் தொடர்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர்செல் நிறுவனத்துக்கு ஏறக்குறைய ரூ.15,500 கோடி கடன் இருப்பதால், அதை செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால், தீர்ப்பாயத்தை அந்த நிறுவனம் அணுகி இருக்கிறதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வடமாநிலங்களில் 6 மண்டலங்களில் தனது சேவையை ஏர்செல் நிறுவனம் நிறுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

 

 

மேலும் படிக்க