• Download mobile app
17 Aug 2025, SundayEdition - 3476
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது பிரமல் நிறுவனம்

September 29, 2021 தண்டோரா குழு

பிரமல் என்டர்பிரைசஸ் லிமிடெட், திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தை பணம் கொடுத்து கையகப்படுத்தி தனது நிறுவனத்துடன் இணைத்திருப்பதை அறிவித்துள்ளது. நிதிச் சேவைத் துறையில் வங்கித் திவால் சட்டம் என்கிற ஐபிசி வழித்தடத்தில் முதல் வெற்றிகரமான தீர்வு மற்றும் மதிப்பு அடிப்படையில் மிகப்பெரிய தீர்வாக இந்தக் கையகப்படுத்தல் மற்றும் இணைப்பு இருக்கிறது.

இந்த இணைப்பு குறித்து பிரமல் குழுமத்தின் சேர்மன் அஜய் பிரமல் கூறும் போது,

இந்த அற்புதமான கையகப்படுத்துதலை நிறைவு செய்வதற்காக செய்யப்பட்ட பரிவர்த்தனை கட்டணத்தை அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது நமது நாட்டின் நிதிச் சேவையை பெறாத மற்றும் குறைவாக பெறும் வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளை நிறைவேற்ற ஒரு முன்னணி டிஜிட்டல் சார்ந்த, பல்வகைப்பட்ட நிதிச் சேவை நிறுவனமாக மாறுவதற்கான எங்கள் திட்டங்களை துரிதப்படுத்தி இருக்கிறது.

எந்தவொரு மேம்பட்ட பொருளாதாரத்தின் முக்கியமான பண்பு ஒரு வலுவான வங்கித் திவால் சட்டம் ஆகும். முக்கியமான வங்கித் திவால் சட்ட சீர்திருத்தங்கள் இது போன்ற சிக்கலான பிரச்னைகளை இன்னும் முழுமையாக மற்றும் சரியான நேரத்தில் தீர்க்க உதவி செய்திருக்கிறது. என்றார்.

பிரமல் குழுமத்தின் செயல் இயக்குநர் ஆனந்த் பிரமல் கூறும் போது,

இந்த ஒருங்கிணைந்த நிறுவனம் என்பது 301 கிளைகள், 2,338 ஊழியர்கள் மற்றும் 10 லட்சத்துக்கும் அதிகமான வாழ்நாள் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும். வேகமாக வளர்ந்து வரும் வாங்கக் கூடிய வீட்டுவசதி பிரிவினருக்கு கடன் வழங்குவதில் நாங்கள் முன்னணி நிறுவனமாக இருப்போம். கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் எங்கள் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத் தளம், மேம்பட்ட பகுப்பாய்வுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு இயந்திர வழிகற்றல் திறன்களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளோம். இந்தக் கையகப்படுத்தல் என்பது இந்தத் தொழில்நுட்பங்களை வாடிக்கையாளர்களின் மிகப் பெரிய தளத்தில் செயல்படுத்த அனுமதிக்கிறது. இணைக்கப்பட்ட புதிய நிறுவனம் இந்தியாவில் டிஜிட்டல் முதல் சிறு கடன்கள் சந்தையில் முன்னணியில் உள்ளது. என்றார்.

மேலும் படிக்க