• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தில்லியில் வீடு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் 5 பேர் பலி

January 10, 2017 தண்டோரா குழு

புது தில்லி அருகே காஸியாபாத் நகரில் வீடு திங்கள்கிழமை நள்ளிரவு இடிந்து விழுந்ததில் 3 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். லோனி என்ற இடத்தில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இது குறித்து காவல்துறை லோனி காவல் துறை அதிகாரி ஸ்ரீகாந்த் பிரஜாபதி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

புதுதில்லி அருகேயுள்ள காஸியாபாத் நகரில் உள்ள லோனி பகுதியில் ரஹத் என்க்ளவ் காலனி உள்ளது. அங்கே ஒரு வீடு திடீரென்று இடிந்து விழுந்தது. அதில் வீட்டு உரிமையாளரின் மனைவி ரேஷ்மா (35), ஷமா (8), அசியா (5), டேனிஷ் (6), மற்றும் ரேஷ்மாவின் சகோதரி ஹஸினா (28) ஆகியோர் அங்கேயே உயிரிழந்தனர்.

இரண்டு மாடி கொண்ட வீடு இடிந்து விழுந்ததில் வீட்டின் உள்ளே இருந்துவர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வீடு இடிந்து இருப்பதையும் உள்ளே மக்கள் சிக்கியுள்ளதையும் பார்த்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கட்டட இடிப்பாடுகளில் சிக்கியிருந்த 5 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது மற்றும் வீடும் சரியாக கட்டப்படவில்லை. இந்த விபத்தில் வீட்டின் சொந்தகாரர் இம்ரான் உள்பட மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க