• Download mobile app
11 Nov 2025, TuesdayEdition - 3562
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் அனுமதி அளிப்பதற்கான உத்தரவு ரத்து

January 8, 2021 தண்டோரா குழு

திரையரங்குகளில் 100% இருக்கைகளுடன் அனுமதி அளிப்பதற்கான உத்தரவை தமிழக அரசு ரத்து செய்தது.

கொரோனா லாக்டவுன் காரணமாக கடந்த மார்ச் மாதம் திரையரங்குகள் மூடப்பட்டன. சுமார் 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகள் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் திறக்கப்பட்டு 50 சதவிகித இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டது. இதற்கிடையில், நடிகர் விஜய் உள்ளிட்ட திரைத்துறையினரின் வேண்டுகோலையடுத்து கடந்த 4-ம் தேதி திரையரங்குகளில் 100 சதவிகித இருக்கைகளையும் பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.

திரையங்குகளில் 100 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதற்கு பொதுமக்கள், மத்திய அரசு, மருத்துவத்துறையினர், நீதிமன்றம் என பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில், பல்வேறு தரப்பு விமர்சனங்களுக்கு பிறகு 100 சதவிகித இருக்கைக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக வழங்கிய உத்தரவை வாபஸ் பெறுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மறு உத்தரவு வரும் வரை ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 சதவிகித இருக்கை பயன்பாட்டிற்கு மட்டுமே தொடர்ந்து பின்பற்றப்பட உள்ளது.

மேலும், 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளபோதும் கூடுதல் காட்சிகளை திரையிட திரையரங்குகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

* தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி

* 100 சதவீத அனுமதிக்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது

*மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

* உயர்நீதிமன்ற உத்தரவின் படி கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி

* முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க