March 14, 2021
தண்டோரா குழு
இயற்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்.அதன் பின், பேராண்மை, ஈ, புறம்போக்கு என்கிற பொதுடைமை என பல படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது விஜய் சேதுபதியை வைத்து லாபம் எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார்.இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன்உடல்நல குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில்,இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 61.அவரது மறைவிற்கு பல்வேறு திரை துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.