• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருவோடு ஏந்தியவாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

February 8, 2021 தண்டோரா குழு

திருவோடு ஏந்தியவாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அப்போராட்டத்தின் 7 வது நாளான இன்று 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இதில் திருவோடு ஏந்தியவாறும் தட்டுகளை ஏந்தியவாறும் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட அவர்கள் நான்காரை லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, வருவாய், கிராம உதவியாளர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் 3.50 லட்சம் பேருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இளைஞர்களின் வேலை வாய்ப்பைப் பறிக்கும் ஆதிசேஷையா குழுவின் பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்கக் காலத்தைப் பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு அளித்த குற்ற குறிப்பாணைகளை ரத்துசெய்ய வேண்டும். பழையஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை கைது செய்த காவல்துறையினர் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.

மேலும் படிக்க