• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருவண்ணாமலையில் 15 ஆண்டுகளாக கருக்கலைப்பு செய்து வந்த பெண் கைது

December 29, 2018 தண்டோரா குழு

திருவண்ணாமலையில் 15 ஆண்டுகளாக கருக்கலைப்பு செய்து வந்த பெண் குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யபட்டுள்ளார்.

திருவண்ணாமலை செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்த ஆனந்தி என்பவர் வீட்டிலேயே முறையான அனுமதி பெறாமல் ஸ்கேன் சென்டர் நடத்தி வந்திருக்கிறார். மேலும் கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்று கண்டறிந்து சொல்வதும் சிசுக்களை கருக்கலைப்பு செய்வது போன்ற சட்டவிரோத செயல்களை இடுபட்டு வந்துள்ளார். ஏற்கனவே ஆனந்தி கடந்த 2012ஆம் ஆண்டு இதே குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார். மீண்டும் இதே வேலையை தொடர்ந்ததால் 2016 ஆம் கைது செய்யப்பட்டு மீண்டும் ஜாமீனில் வெளியே வந்தார். இரு முறை கைது செய்யப்பட்டும் அவர் இதையே தொடர்ந்து செய்து வந்துள்ளார்.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பொன்னுசாமி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மறுபடியும் கருக்கலைப்பு வேலையை ஆரம்பித்திருக்கிறார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்ததையடுத்து மருத்துவ கண்காணிப்புக் குழு கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று அந்த வீட்டில் சோதனை நடத்திய போது ஆனந்தி பிடிப்பட்டார் அவரிடம் இருந்து ஸ்கேன் கருவி, கருவைக் கலைக்கத் தேவையான ஊசிகள், மருந்து மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசாரணையில் ஆனந்தி தினமும் 10 முதல் 20 பெண்களுக்கு கருக்கலைப்பு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆனந்தி குண்டாஸ் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் 15 ஆண்டுகளில் இதுவரை 19,000க்கு மேலான கருக்கலைப்புகளை செய்துள்ளார் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க