October 4, 2018
தண்டோரா குழு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை நேரில் சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் விசாரித்தார்.
மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டு 53 நாட்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த செவ்வாயன்று ஜாமீனில் வெளியே வந்தார்.தற்போது அவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமுருகன் காந்தியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.