August 14, 2021
தண்டோரா குழு
கோவையில் 23 வயது பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய 27 வயது வாலிபரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோவை சுக்கரவார்பேட்டை பகுதியில் பேக்கரி நடத்தி வரும் 27 வயது ஆண், சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த 23 வயது பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் 3 வருடங்களாக காதலர்களாக இருந்துள்ளனர். அப்போது அவர்கள் பல்வேறு இடங்களுக்கு செல்வதும், தங்குவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணிடம் திருமணம் செய்வதாக கூறி அந்த வாலிபர் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
இதனிடையே அந்த பெண் திருமணம் செய்ய வற்புறுத்திய போது அவர் திருமணம் செய்யாமல் ஏமாற்றி வந்துள்ளார். இதனை அடுத்து அந்த பெண் மத்திய அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மகளிர் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்