• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது” – சென்னை உயர் நீதிமன்றம்

December 7, 2019

திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆன்லைன் மூலமாக விடுதிகள் முன்பதிவு செய்வது தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஓயோ நிறுவனம் சார்பில் சர்வீஸ் அப்பார்ட்மென்ட்கள் வாடகைக்கு விடப்பட்டு வந்தன. கோவையில் இது போன்ற சர்வீஸ் அப்பார்ட்மென்ட்கள் திருமணமாகாத ஆண்களும் பெண்களும் தங்கினால் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என விளம்பரம் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாதர் சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் அடிப்படையில் முறையான அனுமதியின்றி செயல்பட்டு வந்த விடுதிக்கு சீல் வைக்க வருவாய் துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்திரவிட்டார்.இதனை எதிர்த்து, ஹோட்டல் உரிமையாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, திருமணமாகாத ஆணும் பெண்ணும் ‘லிவிங் டூ கெதர்’ முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ, அதேபோன்று இருவரும் விடுதியில் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது, என தெளிவுப்படுத்தினார்.மேலும்,திருமணமாகாத ஆணும் பெணும் ஒரே அறையில் தங்கக் கூடாது என்று சட்டம் ஒன்றும் இல்லை திருமணமாகாத தம்பதிகள் சேர்ந்து வாழ்வதில் குற்றமில்லை எனவும் தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, இந்த விடுதி மூடப்பட்டபோது உரிய சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாததால், விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

மேலும் படிக்க