February 20, 2020
தண்டோரா குழு
திருப்பூர் அருகே அவினாசியில் நடந்த பஸ் விபத்தில் 20 பேர் பலியானதற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் அவினாசியில் கேரள பஸ்சும் – கன்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட சம்பவத்தில் உயிரிழந்த 20 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உயிரிலந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தின் திருப்பூரில் நிகழ்ந்த பஸ் விபத்து மிகுந்த சோகத்தை அளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நினைவாக எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன. அவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன் என கூறப்பட்டுள்ளது.