• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருப்பூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கபட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு

March 20, 2020

144 தடையுத்தரவு பிறப்பிக்கபட்டதாக பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வதந்திகளை பரப்ப வேண்டாம் என முகநூல் மூலம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் காரணமாக திருப்பூரில் நாளை முதல் 144 தடையுத்தரவு அமல்படுத்த உள்ளதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இது பொதுமக்களிடையே ஒருவித பீதியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக குழப்ப சூழ்நிலையும் திருப்பூரில் நிலவியது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தனது முகநூல் பக்கத்தில் திருப்பூரில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கபடவில்லை எனவும், இதுபோன்ற தேவையற்ற வீண் வதந்திகளை பரப்புபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொறுப்புள்ள குடிமகனாக இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க