• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரில் யூடியூப் உதவியுடன் பிரசவம் பார்த்த பெண் மரணம் கணவர் மீது வழக்கு பதிவு

July 26, 2018 தண்டோரா குழு

திருப்பூர் அருகே யூ டியூப் உதவியுடன் பிரசவம் பார்த்ததில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அப்பெண்ணின் கணவர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கார்த்திகேயன்-கிருத்திகா தம்பதியினர். கிருத்திகா அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கார்த்திகேயன், பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே 5வயதில் ஹிமானி என்ற பெண் குழந்தை உள்ளது.இதற்கிடையில், கிருத்திகா மீண்டும் கருவுற்றிருக்கிறார்.
இவர்களுக்கு இயற்கை மருத்துவத்தில் அதிக ஆர்வம் இருந்துள்ளது.

இந்நிலையல் கிருந்திகா இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்த நிலையில் இயற்கை முறையில் யூ டியூப் உதவியுடன் பிரசவம் செய்வதற்கு தயாராகி உள்ளனர்.இதற்காக யூ டியூப் மூலம் வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் செய்து கொள்வது எப்படி என்பது குறித்து ஆர்வமுடன் பல்வேறு வீடியோக்களை பார்த்து வந்துள்ளனர். கடந்த 22ஆம் தேதி கிருத்திகாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.இதையடுத்து கணவர் கார்த்திகேயன் அவரது தாய் காந்திமதி மற்றும் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன் அவரது மனைவி லாவண்யா ஆகியோர் சேர்ந்து கிருத்திகாவிற்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

அப்போது கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் நஞ்சுக்கொடி வெளிவராததால், கிருத்திகா மயக்கமடைந்தார். இதையடுத்து கிருத்திகாவின் குடும்பத்தினர், 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். எனினும், ஆபத்தான நிலையில் கிருத்திகா இருந்ததால், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையில்,தனது மகளின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சுப்பிரமணியன் நல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து,இந்த விவகாரத்தில் கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன், நண்பர் பிரவீன் மற்றும் அவரது மனைவி லாவண்யா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் மூவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இவ்விவகாரத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க