• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திருப்பூரில் பசுமையை காக்க முளைத்த இளம் விதைகள் !

January 4, 2019 -ச.ச.சிவசங்கர்

இந்திய பொருளாதார வளர்ச்சியின் ஒருபங்கும், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் திருப்பூர் ஆடைகளுக்கு பிரபலம் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு சாயக்கழிவினால் மாசு அடைந்ததும் உண்மை. இது ஒருபுறமிருக்க சுற்றுச்சூழலை காப்பாற்ற ஒரு இளைஞர் கூட்டம் உருவாகியிருப்பதும் உண்மை. செய்தி அறிந்து அந்த அமைப்பை சார்ந்தவரிடம் தொடர்புகொண்டேன். என்னைஅறிமுகப்படுத்திக்கொண்டு, நெகிழி இல்லா திருப்பூரை என்ற உங்கள் அமைப்பை பற்றி கேள்விப்பட்டேன், உங்களை சந்திக்க வேண்டும் என்றதும், அவர் நண்பர் ஒருவரது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றார் நந்தகுமார். ஒரு சிறிய குழு ஆர்வத்தின் பேரால் செயல்பட்டு வருகிறார்கள் என்றுநினைத்தே சென்றேன். அங்குஒரு ’பீங்கான் கோப்பையில் கிரீன்டீயோடு துவங்கியது எங்கள் உரையாடல்.

நம் தலைமுறையில் பலருக்கும் ஆதர்சனமாக விளங்கியவரும், அனாவசிய கனவுகளை உதறிவிட்டு ஆக்கப்பூர்வமான கனவுகளை காணச்சொன்னரும், இளைஞர்களின் வாழிகாட்டி அப்துல்கலாம் அவர்களின் நினைவாக துவங்கபட்டது தான் இந்த ”ட்ரீம் 20” சுற்றுசூழல்அமைப்பு. கடந்த 2015 ஆகஸ்ட் மாதத்தில் இருபது இளைஞர்களால் துவங்கபட்டது இந்தஅமைப்பு. வழக்கம் போல் மரம் நடுதலில் துவங்கியது இவர்கள் பயணம். வழக்கம்போல் சில ஏளனப்பேச்சுகளும் கூட. ஆனால் இவர்கள் எதையும் பொருத்தாமல் தங்களது பயணத்தில் தெளிவாக இருந்துள்ளனர். அது அவருடன் பேசும்போதே தெரிந்துகொண்டேன். இவர்கள் பிளாஸ்டிக் பற்றியோ அதன் பாதிப்புபற்றியோ பேசுவதோடு மற்றும் நிற்கவில்லை அதை இவர்கள் பீங்கான் கோப்பையில் டீ கொடுக்கும்போதே கணித்துவிட்டேன்.

மாறாக ஓவ்வொரு பள்ளிகளிக்கு சென்று மாணவர்களுடன் உரையாடுவது, அங்குள்ள பிளாஸ்டிக்குகளை சேகரிப்பது போன்ற செயல்களை செய்துவருகின்றனர். பிளாஸ்டிக் அறிமுகமாகி சிலகாலங்களே ஆனாலும் பெரும் அபாயத்துக்குள் தள்ளிவிட்டது என்பதுதான் உண்மை. அது மக்களிடம் பெரும் வரவேற்ப்பை பெற்றதன் விளைவு, நாம் கடைகளுக்கு செல்லும் போது கையில் பையைகொண்டு செல்லும் பழக்கம் அடியோடு ஒழிந்தது, சொகுசு வாழ்க்கைக்கு மக்கள் தயாராகினர்.
மேலும், நூற்றுக்கும் அதிகமாக சில்வர் டம்ளர் இருந்தது. அதை திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு கொடுத்துவிடுகின்றனர். காரணம் பிளாஸ்டிக் உபயோகபடுத்த கூடாது என்பதன் நோக்கம். இயற்கை சார்ந்த பல முன்னெடுப்புகளை செய்துவருகின்றனர். திருப்பூர் மாநகராட்சியோடும், திருப்பூரை சுற்றியுள்ள மற்ற அமைப்புகளோடும் இணைந்து செயல்படுகின்றனர். மிகஆர்வத்தோடும், அர்பணிப்பு உணர்வோடு இருப்பதை அவரது பேச்சில்கண்டேன்.

நந்தகுமாரிடம் கேட்ட போது:

”அப்துல் கலாமை முன் மாதிரியாக எடுத்து நாங்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இருபது பேருடன் துவங்கிய இந்த குழு இப்பொழுது நூற்றுக்கு அதிகமானோர் இருக்கின்றனர். பிளாஸ்டிக்கை ஒழித்து பசுமையான சூழலை உருவாக்குவதே எங்களின்நோக்கம். அதற்கான சூழல்அமைந்துள்ளது. துணிப்பை தயாரிக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. முன்பு இருந்தைவிட இப்போதுதெல்லாம் பலரும் துணிப்பை, பாத்திரங்களை கடைகளுக்கு எடுத்துசெல்கின்றனர். பலநாள் பழக்கத்தை உடனே ஒழித்துவிட முடியாது ஆக சிறிது சிறிதாக மாற்றத்தை கொண்டுவருவதுடன் அதை நிலைக்கச்செய்யவேண்டும்” என்று நம்பிக்கையளிக்கிறார் நந்தகுமார்.

மேலும் படிக்க