April 18, 2020
தண்டோரா குழு
திருப்பூரில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக உயர்ந்துள்ளது. இதில், திருப்பூரில் அதிகமாக 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இவர்கள், கொரோனாவால் தனிமைபடுத்தப் பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.
ஏற்கனவே திருப்பூரில் 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 108 ஆக உயர்ந்துள்ளது.மேலும்,சென்னையில் 7 பேருக்கும், தென்காசியில் 4 பேருக்கும், திண்டுக்கல்லில் 3 பேருக்கும், பெரம்பலூரில் 3 பேருக்கும், நெல்லையில் இருவருக்கும், தஞ்சாவூரில் ஒருவருக்கும், கோவையில் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.