March 7, 2018
தண்டோரா குழு
பெரியார் சிலையை சேதப்படுத்திய முத்துராமன் பாஜகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து,நடந்த விசாரணையில் பாஜகவின் திருப்பத்தூர் நகர ஒன்றிய செயலாளர் ஆர்.முத்துராமன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், பெரியார் சிலை உடைப்பு சம்பவத்தில் காவல் துறையினாரல் கைது செய்யப்பட்ட வேலூர் மேற்கு மாவட்டம் திருப்பத்தூர் நகர ஒன்றிய பொதுச் செயலாளர் முத்துராமனை கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்துள்ளார்.