July 14, 2018
தண்டோரா குழு
திருப்பதியில் ஆக.9 முதல் 17ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 12 ஆண்டுக்கு ஒருமுறை மகா சம்ப்ரோக்ஷணம்(கும்பாபிசேகம்) நடைப்பெறும்.திருமலை-திருப்பதி தேவஸ்தானம் ஏற்பட்ட பிறகு 1958,1970,1982,1994,2006ம் ஆண்டு சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 16ம்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளதால் ஆகஸ்ட் 9 முதல் 17-ம் தேதி வரை தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,திருப்பதியிலிருந்து திருமலைக்கு வாகனம்,மலைப்பாதை வழியாக பக்தர்கள் நடந்து செல்ல அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.