• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருநங்கையர் முன்மாதிரி விருதுக்கு விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தகவல்

February 12, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் திருநங்கையாக இருந்து சிறப்பாக முன்னேறிய ஒருவருக்கு, முன்மாதிரி விருது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15-ம் தேதி வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு தேர்வானவர்களுக்கு ரூ.1 லட்சம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த விருது பெற விண்ணப்பிக்கும் திருநங்கைகள், அரசு உதவி பெறாமல், சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகள், அவர்களது வாழ்க்கையில் முன்னேற உதவி செய்து இருக்க வேண்டும். மேலும் திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக் கூடாது.

இந்த விருது பிற தகுதியான திருநங்கையர்கள் www.awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து வருகிற 28-ம் தேதி மாலை 5 மணிக்குள் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க