கோவையில் கடந்த சில தினங்களாக பலத்த காற்று வீசுவதுடன் லேசான மழை பெய்து வருகிறது.இன்று லேசான மழை பெய்த நிலையில் திருச்சி சாலை அரசு மருத்துவமனை அடுத்து உள்ள தர்கா எதிரே உள்ள மரம் வேறோடு சாய்ந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
வேறோடு சாய்ந்து விழுந்த மரத்தின் கீழ் கார் ஒன்று நிறுத்தி வைக்கபட்டு இருந்த நிலையில்
அதிர்ஷடவசமாக யாரும் இல்லாத காரணத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.மரம் சாய்ந்து விழுந்தது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து அவசர மீட்பு ஊர்தியில் வந்த 6 பேர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் ரம்பம் கொண்டு அரை மணி நேரத்தில் கிளைகளை வெட்டி அப்புறபடுத்தினர்.
மரம் விழுந்ததின் காரணமாக சிறுதி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து காவலர்கள் வாகனங்களை மாற்று பாதையில் அனுப்பி வைத்தனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்