April 4, 2018
தண்டோரா குழு
போலீஸ் எட்டி உதைத்ததில் பைக்கில் இருந்து விழுந்து உயிரிழந்த உஷாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து கமல்ஹாசன் ஆறுதல் கூறியதோடும் அவர்களது குடும்பத்துக்கு ரூ.10 லட்சத்தை நிதியுதவியாக அளித்தார்.
கடந்த மார்ச் 7-ஆம் தேதி இரவு திருச்சி திருவெறும்பூர் பெல் ரவுண்டானா அருகே ஹெல்மட் அணியாமல் சென்ற தம்பதியின் இருசக்கர வாகனத்தை காவல் ஆய்வாளர் காமராஜ் நிறுத்தினார். இதனால் ராஜா வண்டியை வாகனத்தைகாமராஜ் எட்டி உதைத்தார்.இதில்ராஜா – உஷா தம்பதி நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.இதில் சம்பவத்தில் 3 மாத கர்ப்பிணியான உஷா உயிரிழந்தார்.இந்த சம்பவம் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு ஆறுதல் தெரிவித்த கமல்ஹாசன் உஷாவின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் வழங்குவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று திருச்சியில் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த மக்கள் நீதி மய்யக்கட்சி தலைவர் கமல்ஹாசன், உஷாவின் தாய் மற்றும் கணவர் ராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பின்னர் அவரது தாய் லூர்து மேரி மற்றும் சகோதரர் ராபர்ட்டுக்கு ரூ. 5 லட்சத்தை அளித்தார். இதையடுத்து மீதமுள்ள ரூ.5 லட்சத்தை உஷாவின் கணவர் ராஜாவிடம் வழங்கினார். அப்போது கதறி அழுத மூவரையும் ஆசுவாசப்படுத்தினார் கமல்.