• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும்

May 3, 2022 தண்டோரா குழு

திமுக வாக்குறுதி அளித்தபடி அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க மாநாட்டில் வலியுறுத்தபட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கத்தின் கோவை மண்டல கோரிக்கை மாநாடு நடைபெற்றது.சங்கத்தின் சிறப்பு தலைவர் கு.பாலசுப்பரமனியன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்கள்,சத்துணவு பணியாளர்கள், நியாயவிலைகடை மற்றும்டாஸ்மாக் ஊழியர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் வாக்கு உறுதி அளித்த படி தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக வழங்க வேண்டும் ,பத்தாண்டுகள் பணியாற்றிவரும் அரசு ஊழியர்களை நிரந்தர பணியாளர்களாக அறிவிக்க வேண்டும்.

ஒய்வுதியம் இல்லாத தூய்மைபணியாளர்கள், தூய்மை காவலர்கள்,மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஓய்வுதியம் வழங்க வேண்டும்,மேலும் அங்கன்வாடி ஊழியர்கள்,டாஸ்மாக் ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்ட கால முறை பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதிய விகிதம் வழங்க வேண்டும் என 20 கோரிக்கை அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் படிக்க