March 13, 2021
தண்டோரா குழு
திமுக தேர்தல் அறிக்கை வெற்று, பொய்யான அறிக்கை என்றும், எடப்பாடி சொல்வதை செய்வார் என்பதால் உண்மையான அறிக்கை என்பது அதிமுக வெளியிடுவது தான் என்றும், ஏற்கனவே, கடன் தள்ளுபடி, இலவச சிலிண்டர் என அறிக்கை தொடர்பான சிறு குறிப்பை முதல்வர் சொல்லிவிட்டார் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தவர், தமிழகம் முழுவதும் எடப்பாடி அலை அடிப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக, கோவை மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகளில் போட்டியிடவுள்ள 9 வேட்பாளர்கள் கலந்துக்கொண்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட அதிமுக தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் நடைபெற்றது.
முன்னதாக, கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மைல்கள், சுகுனாபுரம் பகுதியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சாமிதரிசனம் மேற்கொண்டவர், தொடர்ந்து அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த சிறப்பு பூஜையிலும் கலந்துகொண்டார். அந்த பகுதி மக்களிடையே, சாதனை விளக்க நோட்டீஸ்களை வினியோகம் செய்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.