• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன !

March 19, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலுக்கான திமுக-வின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிடப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.

பின்னர் பேசிய ஸ்டாலின்,

டி.ஆர்.பாலு தலைமையிலான குழு திமுக-வின் தேர்தல் அறிக்கையை தயார் செய்துள்ளது.திமுகவை வெற்றி பாதையில் நடத்தியவர்கள் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும். முரசொலி மாறனின் லட்சிய கனவுகளை திமுகவின் தேர்தல் அறிக்கை பிரதிபலிக்கும் என்றார். பாரதிய ஜனதாவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின்வளர்ச்சி விகிதம் குறைந்து பணவீக்கம் அதிகரித்துவிட்டது. அதிமுக அரசின் ஊழலை பாரதிய ஜனதா கண்டுகொள்ளவில்லை. தமிழக அரசின் கடன் பன்மடங்கு உயர்ந்து விட்டது.திமுக-வின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க பலரும் ஆன்லைன் மூலமாக ஆலோசனை அளித்தனர் எனக் கூறியுள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்,

* தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழில் செயல்பட , தமிழை இணை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க சட்டத்திருத்தம் செய்யப்படும்.

* விவசாயத்திற்கு தனிபட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

* மத்திய அரசின் வரி வருவாயில் 60% மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

* வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடைந்திட, மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையிலும், பாரபட்சமில்லாமலும் நிதி பங்கீடு செய்யப்பட வேண்டும்.

* மத்திய நிதிக்குழு முடிவுகள் மாநிலங்கள் மன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும்

* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்

* வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் தொழில் துவங்க ரூ.50,000 வட்டியில்லா கடன் வழங்கப்படும்

* மாணவர்களுக்கு ரயில்களில் இலவச பயணசலுகை

* கீழடியில் தொல்லியல் ஆய்வு தொடரும், அருங்காட்சியகம் அமைக்கப்படும்

* தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் 1995-ன்படி, குறைந்தபட்சம் ரூ.8,000 ஆக நிர்ணயிக்கப்படும்.

* பாஜக அரசின் தவறான முடிவுகளால் சிதைந்துபோன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்துடன் கூடிய பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்படும்.

* தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூ,1,50,000 ஆக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும்.

* பெட்ரோலிய எரிபொருட்களின் விலையைக் கட்டுக்குள் வைக்க நிர்ணயிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டு வரப்படும்.

* சமையல் எரிவாயு மானியத் தொகை வங்கிக்கணக்கில் திரும்ப செலுத்தப்படும் முறை மாற்றப்பட்டு முன்பிருந்தது போல சிலிண்டர் விலை குறைக்கப்படும்.

* தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

* நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

* 1 கோடி பேர் சாலை பணியாளர்களாக நியமிக்கப்படுவர்

* பெட்ரோல், டீசல் விலை பழைய முறைப்படியே நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும்

* மாணவர்களுக்கான கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்

* மதுரை, திருச்சி, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* புயலால் பாதிக்கப்படும் இடங்களில் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் அமைத்து தரப்படும்

* சேது சமுத்திர திட்டம் பணிகள் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை

* பாலியல் குற்றங்களை தடுக்க உரிய சட்டம் கொண்டு வரப்படும்

* பட்டாசு தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்

* ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வலியுறுத்தப்படும்

* ஏழை நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்

* காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும்

* 100 நாள் வேலை திட்டத்தின் எண்ணிக்கை 150 நாளாக உயர்த்தி அறிவிக்கப்படும்

* நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கல்வி மீண்டும் மாநில பட்டியலுக்கு கொண்டு வரப்படும்

* மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ போன்ற திட்டங்களை கைவிட வலியுறுத்தல்

என தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க