• Download mobile app
20 Mar 2026, FridayEdition - 3691
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர் அஞ்சலி

August 8, 2018 தண்டோரா குழு

ராஜாஜிஹாலில் வைக்கப்பட்ட மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதையடுத்து அவரது உடல் நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்திய பின்னர், சி..ஐ.டி.காலனியில் உள்ள கனிமொழி வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், ராஜாஜி ஹாலுக்கு கொண்டுவரப்பட்டு, அங்கு பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்., மேற்கு வங்க முதல்வர் மம்தா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன்சாண்டி, வைகோ, முத்தரசன், ராமதாஸ், திருமாவளவன், நடிகர்கள் ரஜினி, கமல், சிவக்குமார், சூர்யா, டி.ராஜேந்தர், அஜீத், வடிவேலு, சரோஜாதேவி தினகரன் மற்றும் அவரது அணியை சேர்ந்த எம்.எல்.ஏக்களான வெற்றிவேல், செந்தில்பாலாஜி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதைபோல், கருனாநிதிக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் அவரது உடல் மீது ராணுவத்தினர் தேசிய கொடியை போர்த்தினர். மேலும் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தலைமை செயலகத்தில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டது.

மேலும் படிக்க