February 13, 2021
தண்டோரா குழு
திமுக என்ன சொல்கிறதோ, என்ன கேட்கிறதோ அதை செய்யும் அரசாக தான் அதிமுக உள்ளதாகவும், சொந்த புத்திக்கு, எடப்பாடி எந்த திட்டத்தையும் தரவில்லை என்றவர், ஸ்டாலினின் தங்க புத்தியை வைத்துக்கொண்டு தான் திட்டத்தை நிறைவேற்றி வருவதாக முதல்வரை திமுக எம்.பி.ஆ.ராசா சாடினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசியவர்,
விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட போது, கடனை ரத்து செய்ய சாத்தியமில்லை என திட்டுவட்டமாக பதில் மனுவை தாக்கல் செய்த முதல்வர், திடீரென தேர்தல் நேரத்தில் கடனை ரத்து செய்திருப்பது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடனை ரத்து செய்வோம் என ஸ்டாலின் அறிவித்ததால்,அவருடைய குரலுக்கு மதிப்பளிக்கும் வகையில் முதல்வர் அறிவித்துள்ளதால், அந்த முழு நற்பெயரும் திமுகவிற்கே சேரும் என்றவர், அதேபோல், 7.5% இட ஒதுக்கீடும் திமுக வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே, அரசு நிறைவேற்றியதாக தெரிவித்தார்.
கோவையில், 65கி.மீ., சத்தி சாலை, கிழக்கு புறவழிச்சாலை 54கி.மீ.,, கோவை-கரூர் 114 கி.மீ., எல்.அன்.டி., 28 கி.மீ., ஆகிய 4 திட்டங்களையும் நிறைவேற்ற அண்மையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தான் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒப்புதல் அளித்ததாகவும், இந்த திட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட 1 லட்சம் கோடி கூட புதிய திட்டங்களுக்கு அல்லாமல் பழைய திட்டங்களை சேர்த்து தான், கவர்ச்சியான எண்ணிக்கைக்காக அறிவிக்கப்பட்டதே தவிர, புதிய திட்டங்கள் எதுவும் இல்லை என்றும், வழக்கம் போல், தமிழகத்தை வஞ்சிக்கும் பட்ஜெட் என்றார்.
மோடியும், பாஜகவும், எதை சொன்னாலும், எதை செய்தாலும், *வானத்து நட்சத்திரத்தை தமிழகத்தில் கொண்டு வந்து வைக்கப்போரோம் என சொன்னால் கூட,* அதை வரவேற்று நல்ல திட்டம் அருமையான முயற்சி என பேசக்கூடிய அடிமை புத்தியை மூளைக்குள் செலுத்துகின்ற அடிமை அரசாங்கமாக தமிழக அரசும், எடப்பாடியும் செயல்படுவார்கள் என பட்ஜெட்டை பாராட்டுவதன் மூலம் உணரலாம் என்றவர், நேரு, காமராஜர், இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., கலைஞர் என பொது வாழ்வில் ஈடுபடுவோர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வருவது இயற்கை தான் என்றும், அதில், எது உறுதியாகி இருக்கிறது என்பதை தான் பார்க்க வேண்டும் என்றும், ஆனால், அரசியல் சட்டத்தை படுகொலை செய்த ஊழல் குற்றத்தை புரிந்த ஜெயலலிதா, 4 ஆண்டுகள் தண்டனை கொடுக்கப்பட்டது தொடர்பால பதில் சொல்ல முடியாமல் எடப்பாடி, அவருடைய படத்தை வைத்துக்கொண்டு அம்மா ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என சொல்வதை விட வெட்கம் கெட்ட வேலை எது என கேள்வி எழுப்பினார்.
இப்போது கூட, அமைச்சர் வேலுமணி மீது திமுக கொடுத்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை என சிபிசிஐடி அறிக்கை அளித்து உள்ளதாக கூறும் அறிக்கையை, மனுதாரரிடம் தர நீதிமன்றம் சொல்லியும் 1 ஆண்டுகளாக அரசு வழங்கவில்லை என்று குற்றச்சாட்டினார். தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாக நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு மதிப்பளித்து தேர்வை அடுத்த கல்வியாண்டு முதல் அமல்படுத்த மாட்டோம் என தமிழக வருகைபோது பிரதமர் அறிவித்தால் நாங்கள் கூட பாராட்டுவோம் என்றாலும், ஆனால், பிரதமர் செய்வாரா என்று கேள்வி எழுப்பியவர், நெய்க்கு தொன்னையா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்று சொல்வது போல், யார் தலைமை தாங்க போகிறார்கள் என பாஜக, அதிமுக கூட்டணியில் இன்னமும் இழுபறி நீடிப்பதாகவும், 7 பேர் விடுதலையிலும் அதிமுக, பாஜக தமிழக மக்களை வஞ்சிப்பதாக சாடினார்.