• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக, காங்கிரஸ் ஸ்டெர்லைட் ஆலையிடம் ஊக்கம் பெற்றதன் விளைவே பாதிப்பு அதிகரிக்க காரணம் – தமிழிசை

June 1, 2018 தண்டோரா குழு

திமுக,காங்கிரஸ் பெற்ற ஊக்கத்தின் விளைவாக தான் தற்போது ஸ்டெர்லைட்டில் இருந்து அபாயம் அதிகரித்ததற்கு காரணம் என்றும்,40,000 டன் தாமிரம் உற்பத்தி செய்ய அனுமதி கொடுத்து விட்டு,4 லட்சம் டன்னாக உற்பத்தி செய்தது தான் எதிர்விளைவுகள் அதிக பாதிப்பாக வெளிவந்தது என்பதை திமுக ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஸ்டெர்லைட் ஆலை பாதிப்புகள் அதிகரிப்பிற்கும்,போராட்டம் என அனைத்திற்கும் திமுக தான் காரணம் என்று முதல்வர் நேற்று சொன்னது உண்மை என்றவர்,பா.சிதம்பரம் இயக்குனராக இருந்த போது ஸ்டெர்லைட்டுக்கு உதவவில்லையா என்றும் கேள்வி எழுப்பினார்.

தூக்குக்குடியில் போராட்டத்தின் போது தீவைப்பு,கல்வீச்சு என வன்முறையில் ஈடுபட்டது யார் என்பதில் சந்தேகம் இருக்கிறது என்று சொல்வதற்கு ரஜினி உட்பட மற்ற கட்சிகளுக்கு உரிமை உள்ளது.அபாயகரமாக நடந்தது மக்கள் என்று சொல்வது மூலம் மக்களை தான் திமுக,கம்யூனிஸ்ட், திருமாவளவன் உள்ளிட்டோர் கொச்சப்படுத்துகிறார்கள் என்று சாடியவர்,திமுக மாதிரி சட்டமன்றத்தை காங்கிரஸ் புறக்கணித்து விட்டதாகவும்,மோசமான முன்னுதாரணத்தை சட்டமன்ற வரலாற்றில் ஸ்டாலின் படைத்து வருவதாக குற்றஞ்சாட்டினார்

அழிவுப்பாதை திட்டத்தை வேண்டாம் என்றால் சரி என்றும், ஆக்கப்பூர்வமான திட்டத்தை எதிர்த்தால் வேலைவாய்ப்பு உள்ளிட்டவை பாதிக்கும் என்று கவலை தெரிவித்தவர்,எதிர்கட்சிகளால் மக்களின் நலன் பாதிக்கப்படுவதாகவும்,தூத்துக்குடி தாண்டி தமிழகத்தில் பல பிரச்சனைகள் உள்ளதாகவும், அது தொடர்பாக சட்டமன்றத்தில் மட்டுமே விவாதிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

நேர்மறையான அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்றும்,எதிர்மறை கருத்துகளுக்கு மோசமான விமர்சனம் செய்வது தவறு என்று கூறியவர்,சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு திட்டங்களை கொண்டு வருவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாகவும்,தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு முடிவு செய்யும் என்று ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தால் தமிழக அரசுக்கு மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்குமா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.

தூத்துக்குடியில் தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டது சமூக விரோதிகள்.சமூக விரோதிகள் என கூறுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தான் சமூக விரோதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் என சாடியவர்,மற்றதற்கு கண்டனம் தெரிவிக்கும் அரசியல் கட்சிகள் பாஜக என்றால் கண்டனம் தெரிவிப்பதில்லை என வருத்தம் தெரிவித்தவர்,கண்டிப்பதில் கூட பாரபட்சம் என்றார்.

மேலும் படிக்க