• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக ஒரு தொகுதி கூட ஒதுக்காதது மமக தொண்டர்களுக்கு வருத்தம் – ஜவாஹிருல்லா

March 5, 2019 தண்டோரா குழு

திமுக எங்களுக்கு தொகுதி ஒதுக்கவில்லை இது தமிழகம் முழுவதும் உள்ள மமக தொண்டர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது என தலைவர் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
\
நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் தமிழகத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ்,மதிமுக, சிபிஐ, சிபிஎம், ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், திமுக கூட்டணியில் மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் தர இயலவில்லை; தேர்தலில் ஆதரவை கோரியுள்ளோம் என முக ஸ்டாலின் கூறியிருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா,

மக்களவை தேர்தலில் திமுகவிடம் ஒரு தொகுதி கேட்டோம் ஆனால் ஒதுக்கப்படவில்லை, இது தமிழகம் முழுவதும் உள்ள மனிதநேய மக்கள் கட்சி தொண்டர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சி நிலைப்பாடு குறித்து மார்ச் 9-ம் தேதி நடைபெறும் நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அறிவிக்கப்படும். மேலும் தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி மார்ச் 9ம் தேதி அவசர செயற்குழுவில் முடிவு எடுக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க