• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக ஆட்சியில்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை-சசிகலா

January 4, 2017 தண்டோரா குழு

திமுக ஆட்சியின் போது தான் ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்கப்பட்டது என அதிமுக பொதுச்செயலாளர் வி.கே சசிகலா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து வி.கே. சசிகலா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தடையின்றி நடத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சிகளை மறைத்துவிட்டு, அவரது புகழுக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்குப் புறம்பான கருத்துகளை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசிவருகிறார்.

கடந்த 2011ம் ஆண்டு திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான், காட்சி விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டது. அதன் காரணமாகவே ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது . ஜல்லிக்கட்டு தடை வந்ததற்கான காரணங்களை யார் இணையதளத்தில் தேடினாலும் பக்கம், பக்கமாக உண்மை தகவல் கிடைக்கும்.

திமுக காங்கிரஸ் கூட்டணியின் இந்த நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு போட்டிக்குத் தடை வந்தது என்ற உண்மையைக் குழித் தோண்டி புதைத்துவிட்டு, மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் ஈடுபடுவது பொறுப்பான செயல் அல்ல.

தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஜெயலலிதாவின் பெயருக்குக் களங்கும் விளைவிக்கும் முயற்சியிலும், உண்மையை மூடி மறைக்கும் முயற்சிலும் மு.க.ஸ்டாலின் ஈடுபட வேண்டாம்.இவ்வாறு சசிகலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க