• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திமுக அணி மாபெரும் வெற்றியை பெறும் – பி.ஆர்.நடராஜன் எம்பி நம்பிக்கை

February 19, 2022 தண்டோரா குழு

மக்களின் தேவை அறிந்து ஆட்சி செய்கிற திமுக அணி மாபெரும் வெற்றி பெறும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நம்பிக்கை தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 67ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் அவரது இணையர் வனஜா நடராஜனுடன் தனது வாக்கினை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தமிழகத்தில் நடைபெறுகிற இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மக்களின் பேராதரவை பெற்ற அணியாக திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி உள்ளது. இந்த அணி அனைத்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள அனைத்து பதவிகளையும் கைப்பற்றி மாபெரும் வெற்றியைப் பெறும்.

இது தமிழக மக்களின் மனநிலையில் இருந்து தெரிகிறது. தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வேன் என்கிற உறுதி மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டுள்ளது. ஆகவே திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அனைத்து அனைத்து இடங்களையும் மாபெரும் வெற்றியை பெறும் என உறுதியாக நான் நம்புகிறேன் என்றார்.

மேலும் படிக்க