December 21, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ராஜ்குமார் முக ஸ்டாலின் முன்னணியில் திமுகவில் இணைந்தார்.
கோவை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளராகவும் கோவை மாநகராட்சி முன்னாள் மேயராகவும் இருந்தவர் கணபதி ப. ராஜ்குமார். இவர் சமீப நாட்களாக அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டார்.இந்நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில்,கோவை மாநகர் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர், கோவை மாநகராட்சி முன்னாள் மேயர் கணபதி ப. ராஜ்குமார் அதிமுகவில் இருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
அப்போது திமுக பொது செயலாளர் துரைமுருகன்,துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி,கோவை மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ ஆகியார் உடன் இருந்தனர்.