May 5, 2021
தண்டோரா குழு
அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு திமுகவில் இணைந்தார்.
கோவை சேர்ந்த அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் விஷ்ணுபிரபு தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுக
இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நமது கழகம் எந்த நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதோ அது அம்மா அவர்களின் மறைவிற்கு பின்னர் திசை மாறி மாவட்ட அமைச்சர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கட்டுப்பாட்டிற்குள் சென்று விட்டது.
மேலும், இளைஞர்களுக்கு எந்த விதமான வாய்ப்புகளும் வழங்கப்படுவதில்லை மக்கள் பணியாற்றுவதற்கும் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. 2021 தேர்தல் தோல்விக்கு பிறகும் இவர்கள் தங்கள் தவறுகளை சரி செய்வதாக தெரியவில்லை. ஆகவே எனக்கு வழங்கிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசாறை மாநில துணை செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன் எனக் கூறியுள்ளார்.