July 8, 2021
தண்டோரா குழு
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்தார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணைத்தலைவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில்,அவர் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இன்று இணைந்து கொண்டார். அவருடன் ம.நீ.ம.கட்சியில் இருந்து விலகிய பத்ம பிரியாவும் இணைந்து கொண்டார்.
மேலும், திமுகவில் இணையவுள்ள 11 ஆயிரம் பேரின் பட்டியலையும் ஸ்டாலினிடம் ஒப்படைத்தார்.