• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுகவின் மூத்த முன்னோடியான “கோவை தென்றல்” மூ.இராமநாதன் காலமானார்

May 10, 2019 தண்டோரா குழு

திமுக முன்னோடியும் முன்னாள் நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினருமான மு.இராமநாதன் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை காலமானார்.

திமுகவின் மூத்த முன்னோடியான “கோவை தென்றல்” மு.இராமநாதன் (87) வயது முதிர்வு காரணமாக இன்று அதிகாலை காலமானார். இவருக்கு இராமகாந்தன் என்ற மனைவியும், பன்னீர்செல்வம், இளங்கோ, மு.ரா.செல்வராஜ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். 2 மகன்கள் இறந்து விட்டனர்.

மு.இராமநாதன் திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். கோவை மாநகர் மாவட்ட செயலாளராகவும் பதவி வகுத்தார். தற்போது வரை உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினராக இருந்து வந்தார். 1993ல்திமுக தலைவர் கலைஞர் இவருக்கு “அண்ணா விருது” வழங்கி கெளரவித்தார். 1970 முதல் 1976 வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் 1985,1989ல் சட்டமன்ற உறுப்பினராவும் 1996ல் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

மேலும், இவர் இந்தி எதிர்ப்பு போராட்டம், இலங்கை தமிழர்களுக்கு எதிரான சட்டப்பிரிவை எரித்து போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு மிசா தண்டனை கைதி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்காக சிறை சென்றவர். இந்நிலையில்,மு.இராமநாதன் உடலுக்கு ஏ. வா.வேலு, ஆ.ராசா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் படிக்க