• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தினமும் ரூ. 2 சம்பாதிக்க முடிகிறபோது சாதாரண சீலிங்ஃபேன்களை ஏன் வாங்க வேண்டும்?

November 28, 2020 தண்டோரா குழு

சீலிங் ஃபேன்கள் இந்தியாவில் எல்லா இடங்களிலும் உள்ளன. அவற்றின் விலை பொதுவாக ரூ. 1500 முதல் ரூ. 10,000 என்பதாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஆறு கோடி சீலிங் ஃபேன்கள் இந்தியாவில் விற்கப்படுகின்றன. அவற்றில் 15 சதவிகிதம் பிரீமியம் ஃபேன்கள் ஆகும். இந்திய சீலிங் ஃபேன் சந்தையில் ரூ. 2500 க்கு மேல் விற்கப்படும் ஃபேன்கள் பிரீமியம் ஃபேன்களாக கருதப்படுகின்றன.சிக்கன விலையுள்ள ஃபேன்களுக்கும் Crompton, Orient மற்றும் Havells போன்ற பிரசித்தி பெற்ற பிராண்ட்களின் பெரும்பாலான பிரீமியம் ஃபேன்களுக்கும் உள்ள ஒரே குறிப்பிடத்தக்க வேறுபாடு அழகியல்தான்.

பொதுவாக, இந்த பிரீமியம் ஃபேன்கள் அதிக RPM, பெரிய மோட்டார், Anti-dust போன்ற சில பயனற்ற அம்சங்களைக் கூறி விற்பனை செய்யப்படுகிறன.பெரிய மோட்டார், அதிக RPM என்றிருந்தால் சீலிங் ஃபேன் அதிக காற்றை அளிக்கும் என்று ஒரு கட்டுக்கதையை சீலிங் ஃபேன் உற்பத்தியாளர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். சீலிங்ஃபேனிலிருந்து வரும் காற்று ஓட்டம் பிளேடின் வடிவத்தையும், மோட்டாரின் torque-ஐயும் பொறுத்து அமைகிறதே தவிர மோட்டாரின் அளவோடு சம்பந்தப்பட்டதல்ல. ’Anti-dust’ என்கிற கூற்று முற்றிலும் தவறான ஒரு சித்தரிப்பு. தூசியே படியாது என்பதை விட தூசி அளவாகப் படியும் என்று வேண்டுமானால் சொல்லலாம். பிரீமியம் ஃபேன்களின் மதிப்பை தவறாகப் புரிந்துகொள்ளும் வகையில் இந்த மலிவான சந்தைப்படுத்தல் வித்தைகள் நுகர்வோரைக் குறிவைத்து செய்யப்படுகின்றன.

நீங்கள் இவ்வகை பிரீமியம் ஃபேன்களின் நுகர்வோர் என்றால், உங்கள் பணத்திற்கு அதிக மதிப்பை வழங்கும் ஃபேன்களை நீங்கள் தேர்வு செய்ய முடியும். அவை super energy efficient ceiling fans ஆகும். Super energy efficient ceiling fans இந்த வழக்கமான பிரீமியம் ஃபேன்களின் விலையிலேயே விற்கப்படுவதாக இருந்தாலும்கூட, ரிமோட் கண்ட்ரோல், நீண்டகால உத்தரவாதம், நிலையான செயல்பாடு, eco-friendly போன்ற சிறப்பம்சங்கள் பலவற்றையும் வழங்குகிறது.
Super energy efficient ceiling fan- களில் Brush-Less Direct Current (BLDC) Motor எனப்படும் மோட்டாரைப் பயன்படுத்துகின்றனர். இந்த மோட்டார் பொருத்தப்பட்ட ஃபேன்கள், சாதாரண ஃபேன்கள் தரும் அதே அளவு காற்றையே வழங்குகின்றன. ஆனால் பாதி அளவு மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றன. ஒரு சாதாரண ஃபேன், ஒரு யூனிட் மின்சாரத்திற்கு சுமார் 13 மணிநேரம் இயங்குகிறது எனில் இந்த super energy efficient fans (BLDC) ஒரு யூனிட்டுக்கு 29 மணிநேரம் இயங்குகின்றன. இந்த BLDC தொழில்நுட்பத்திற்கான செலவு காரணமாக, இந்த ஃபேன்களின் விலையும் சாதாரண பிரீமியம் ஃபேன்களைப் போலவே இருக்கும்.

Super energy efficient ceiling fans-களின் முதன்மைப் பயன் என்னவென்றால், இது மின் கட்டணத்தில் ஏற்படுத்தும் சேமிப்பின் மூலம் ஃபேன் வாங்கும்போது ஏற்படும் கூடுதல் செலவை திரும்பப் பெற்றுக்கொள்ள வழிவகுக்கின்றது. பிரீமியம் ஃபேன்களைத் தேர்ந்தெடுக்கும் நுகர்வோருக்கு, BLDC Fans முதல் நாள் முதலே ஒவ்வொரு நாளும் மின்சார பில் சேமிப்பாக ரூ.2 சம்பாதித்துக் கொடுக்கின்றன. இந்த சேமிப்புகள் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தொடரும். இந்தத் தனிப்பட்ட நன்மையைக் கொடுப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் சுமார் 1 கிலோ CO2 உமிழ்வைத் தவிர்ப்பதன் மூலம் சமூக நன்மையிலும் பங்கெடுத்துக்கொள்கின்றன இந்த BLDC ceiling fans. இது நம் குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்திற்கும் வழிவகுக்கிறது.BLDC Motor அல்லாமல் சாதாரண AC Motor-ஆல் இயங்கும் சில பிரபலமான பிரீமியம் ஃபேன்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. Crompton Aura Prime, Havells Enticer Rose Gold, Havells Zester, Orient Wendy, Bajaj Euro NXG, Usha Elsa, Usha Striker, Khaitan Adore, Candes Breeza, Luminous RIO BELAIR, Luminous Deltoid, V Guard Superflo, and POLYCAB Flux. இந்த ஃபேன்களில் ஒன்றை வாங்க திட்டமிடும் நுகர்வோர்களில் ஒருவராக நீங்கள் இருந்தால், தயவுசெய்து Super energy efficient ceiling fans (BLDC) -களை கருத்தில் கொள்ளுங்கள்.
Super energy efficient ceiling fans, 2012-இல் கோயம்புத்தூரிலுள்ள வெர்ஸா ட்ரைவ்ஸ் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிறுவனம் இவ்வகைப் ஃபேன்களை Superfan என்ற பெயரில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. கடந்த 8 ஆண்டுகளாக சீலிங் ஃபேன் துறையில் இந்த தொழில்நுட்பத்தின் பின்னால் உந்து சக்தியாக Superfan இருந்து வருவதோடு மட்டுமல்லாமல் சீலிங் ஃபேன் சந்தையில் ஒரு பெரிய புரட்சியையே உருவாக்கியுள்ளது. இப்போது அனைத்து பிரபலமான பிராண்ட்களும் இந்த BLDC ஃபேன்களின் சொந்தப் பதிப்பைக் கொண்டு வந்துள்ளன.சீலிங் ஃபேன்களுக்காக நீங்கள் சுமார் ரூ 2500 க்கு மேல் செலவிட திட்டமிடுகிறீர்களென்றால், Superfan போன்ற Super energy efficient ஃபேன்களைத் தேர்ந்தெடுத்துப் அதிக பயனடையுங்கள்.

மேலும் படிக்க