• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திண்டுக்கல் தலப்பாக்கட்டி புதிய ஹோட்டல் உடுமலை பேட்டையில் துவக்கம்

February 12, 2021 தண்டோரா குழு

உடுமலை பேட்டை பழனி ரோட்டில், பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஓட்டல் இன்று துவங்கியது.

இதுகுறித்து திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஹோட்டலின் தலைமை வணிக அதிகாரி அரவிந்த் ஐயர் கூறியதாவது :-

உடுமலை பேட்டையில் எங்களது முதலாவது கிளையை துவக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம். திண்டுக்கல் தலப்பாக்கட்டி பெயரை சொன்னாலே எளிதில் அனைவரையும் ஈர்க்கும் பிரியாணி நினைவில் வரும். கடந்த 65 ஆண்டுகளாக அசைவ, சைவ உணவு வகைகளை தயாரித்து பரிமாறி வருகிறோம். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பரவியுள்ள இந்த பாரம்பரியம், 80 கிளைகளைக் கொண்டுள்ளது. அடுத்த நிதியாண்டிலிருந்து ஒவ்வொரு மாதமும் 3–4 கடைகளை துவக்க உள்ளோம்.

திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணி ஓட்டலின் ஆணி வேர் 1957 ம் ஆண்டில், திண்டுக்கல்லில் ஆனந்த விலாஸ் என்ற ஓட்டல் பெயரில் உருவானது. நிறுவனர் நாகசாமி நாயுடு, எப்போதும் தலைப்பாகை (பாரம்பரிய தலைக்கவச உடை) அணிந்திருப்பார். சில ஆண்டுகளில் அவரது சமையலின் பக்குவம், அவருக்கு “தலப்பாக்கட்டி நாயுடு” என்ற பட்டப்பெயர் உருவாகி, அதே ஓட்டலில் உணவகமும் பெயர்பெற்றது.

ஓட்டல் துவங்கியது முதலே அவர் சுவைக்கு எப்போதும் முக்கியத்துவம் அளிப்பார். இவரது ஓட்டலில் தயாராகும் பிரியாணி எப்போதும் தனிச் சுவை மிகுந்ததாக இருக்கும். அவர் கவனமாக தேர்வு செய்யும் சமையல் பொருட்கள், தரமான மசாலாக்களால் மட்டுமே இதை சாதிக்க முடிந்தது. மிக உயர்ந்த பறக்கும் சிட்டு என்ற சீரக சம்பா அரிசி ரகத்தில் மட்டுமே இந்த பிரியாணி தயாராகிறது. இறைச்சியானது, உயர்தரத்திலான ஆடுகள் விற்பனையாகும் புகழ்பெற்ற ஆட்டுச் சந்தைகளான கன்னிவாடி மற்றும் பரமத்தி சந்தைகளில் வாங்கப்படும் ஆடுகளிலிருந்து பெறப்படுகிறது.
இயற்கையிலேயே எச்சில் ஊறவைக்கும் தலப்பாக்கட்டி பிரியாணிக்கான பொருட்கள் மற்றும் மசாலாக்களை தலப்பாக்கட்டி நாயுடு தனிக்கவனம் கொண்டு தயாரிப்பார். அதற்கு பொருத்தமான தால்சா (பிரியாணியுடன் சேர்த்து சாப்பிடும் உப பொருள்) வை, ஆட்டுக்கல் மற்றும் கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, துவரம்பருப்பு மற்றும் பருப்பு வகைகளைக் கொண்டு தயார் செய்வார். 50 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தாலும், பாரம்பரியமாக இந்த ரகசியத்தை குடும்பத்தினர் மட்டுமே கையாண்டு அதே சுவையிலான பிரியாணி தயார் செய்து வருகின்றனர்.

தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற பிரியாணியாக திகழும் தலப்பாக்கட்டி பிரியாணி, சுவைக்கும், தரத்திற்கும் முன்னுரிமை முக்கியத்துவம் அளித்து பெயரை நிலைநிறுத்தி வருகிறது. பல்வேறு பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள், பிரியாணி குறித்தும், உணவு பொருட்கள் குறித்தும் பிரசுரமாகியுள்ளன. இந்த சீரிய முயற்சியால், தென்னிந்திய அளவில் சாதாரண மனிதரும் அறியும் வகையில், உயர்தர பிரியாணி என்றலே தலப்பாக்கட்டி என்ற பெயராக, புகழாக மாறியுள்ளது.
தென்னிந்திய அளவில் அரசியல்வாதிகள் முதல் ஆட்சியாளர்கள், முதல்வர்கள் வரை, திரைப்பட நட்சத்திரங்களும் தலப்பாக்கட்டி பிரியாணியை ருசித்துள்ளனர். தென்னிந்தியாவின் மாபெரும் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன், சூரக்கோட்டையில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வரும்போதெல்லாம் திண்டுக்கல் தலப்பாக்கட்டி பிரியாணியை சுவைக்காமல் திரும்பியதில்லை. ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி, அனைத்து மக்களும் சுவைத்து மகிழும் ஒரே உணவாக தலப்பாக்கட்டி பிரியாணி கடந்த 50 ஆண்டுகளாக பயணித்துள்ளது.

மேலும் படிக்க