• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாயின் வேண்டுகோலை ஏற்று சிறுமிக்கு உதவிய ஹிந்துஸ்தான் நிறுவனம்

December 16, 2017 தண்டோரா குழு

தானேவில் இடது கை பழக்கமுடைய 4 வயது மகளுக்கு பென்சிலை கூர்மையாக்க ஷார்பனார் கிடைக்க, அவளுக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை ஹிந்துஸ்தான் பென்சில் நிறுவனம் உதவி செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே நகரை சேர்ந்தவர் ஸ்வேதா சிங். அவருக்கு இஷா என்னும் 4 வயது மகள் உண்டு. அந்த சிறுமி இடது கை பழக்கம் உடையவள். வலது கை பழக்கம் உடையவர்கள், எளிதாக செய்யக்கூடிய காரியங்களை இடது கை பழக்கம் உடையவர்கள் செய்வது கடினம். பள்ளிக்கூடத்திலிருந்து வீடூ திரும்பிய பிறகு, வீட்டு பாடங்களை செய்ய பென்சில் உபயோகித்து வந்தால். அதன் முன்பகுதி உடைந்து போகும்போது, பென்சிலை கூர்மையாக்கும் ஷர்பனாரை பயன்படுத்த முடியாமல் கஷ்டப்பட்டாள்.

இதை கவனித்த இஷாவின் தாய், ‘அப்சார’ மற்றும் ‘நடராஜ்’ ஆகிய தரமான பென்சில்களை தயாரிக்கும் ஹிந்துஸ்தான் பென்சில் நிறுவனத்தின் உயர் அதிகாரியை தொடர்புக்கொண்டு, தன் மகளின் நிலையை கூறி, அவர்களுடைய உதவியை நாடியுள்ளார்.

அவர்களும் இடது கை பழக்க முடைய சிறுவர் சிறுமிகளுக்கு எளிதாக பயன்படுத்தக்கூடிய 5 ஷர்பனரை இஷாவுக்கு வழங்கியுள்ளனர்.மேலும், இடது கை பழக்கமுடையவர்கள் எளிதில் பயன்படுத்தக்கூடியே Stationery பொருட்களை தயாரிக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு தாயின் வேண்டுகோளை கேட்டு, அவருக்கு உதவ முன் வந்த ஹிந்துஸ்தான் நிறுவனத்தை மக்கள் தங்கள் சமூகதளங்களின் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க