• Download mobile app
31 Aug 2025, SundayEdition - 3490
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தாயின் உயிரை காப்பாற்றிய மகன்

March 30, 2017 தண்டோரா குழு

பெற்றோர்கள் சொல்வதை தான் பிள்ளைகள் கேட்கவேண்டும் என்று கற்றுத் தர படுகிறார்கள். ஆனால், தாய் சொன்னதை கேட்க மறுத்த சிறுவனால் அவனுடைய தாயின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்க நாட்டின் தலைநகரான வாஷிங்டனில் உள்ள ஒரு பள்ளியில் 9 வயது சிறுவன் ஸ்மித் கல்வி கற்று வருகிறான். செட்ரோ வொல்லி என்னும் இடத்திலுள்ள அவனுடைய வீட்டிற்கு பள்ளி முடிந்து வீடு திரும்பிபோது, அவனுடைய தாயிக்கு இருதயத்தில் வலி ஏற்பட்டு, மூச்சு விட சிரமப்படுவதை பார்த்துள்ளான்.

உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் என்று ஸ்மித் கூறியுள்ளான். ஆனால் அவனுடைய தாய் சிறிது நேரம் தூங்கி எழுந்தால் சரியாகி விடும் என்று கூறியுள்ளார்.

ஸ்மித் பல முறை கட்டயப்படுத்தியதால் மருத்துவரை பார்க்க அவனுடைய தாய் ஒத்துக்கொண்டாள். அவரை பரிசோதித்த அருகில் உள்ள மருத்துவர் ஒருவர் , உடனே ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து, அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு பரிசோதனையின்போது, அவருடைய நுரையீரலில் ரத்தக் கட்டிகள் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் நல்ல முறையில் வீடு திரும்பினார். இந்த நோய்க்கு ‘புல்மொனரி எம்போளிசம்’ என்று பெயர்.

“ஒரு வேலை நான் சொல்லியதை போல், சிறு நேரம் தூங்கி எழுந்தால் சரியாகிவிடும் என்று படுக்க சென்றிருந்தால், நான் உயிருடன் எழுந்திருப்பேனோ என்று நினைத்து கூட பார்க்க முடியவில்லை. 7 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நல்ல முறையில் வீடு திரும்பியதற்கு காரணம் ஸ்மித் தான் என்று உறுதியாக சொல்லமுடியும்” என்று ஸ்மித்தின் தாய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் படிக்க